இப்படத்தை அடுத்த வருட பொங்கல் அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனராம். மொத்தம் 6 மணி நேர படமாக உருவாகியுள்ள இப்படத்தை இரண்டாக பிரித்து இந்தியன் 3 ம் பாகமாக உருவாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். எஞ்சிய காட்சிகளுக்காக ஷங்கர், கமலிடம் வெறும் 10 நாட்கள் மட்டும் கால்ஷீட் கேட்டுள்ளாராம்.
இப்படத்தை தொடர்ந்து நாயகனுக்கு பின்னர் கமல் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் சுமார் 33 ஆண்டுகளுக்கு பின்னர், கமலின் 234 வது படத்துக்காக இணைகிறது.இப்படத்தின் டீசருக்காக முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் அடுத்த மாதம் 7ம் தேதி கமலின் பிறந்த நாளில் வெளியாகிறது.