கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ’இந்தியன் 2’ இப்படத்தின் படப்பிடிப்பின் போதே இந்தியன்-3 படத்துக்கான படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
இதில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து ’இந்தியன் 2’ திரைப்படத்தை வருகிற ஏப்ரல் 12ஆம் தேதியும் ’இந்தியன் 3’ திரைப்படத்தை அடுத்த ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு ’இந்தியன் 2’ படத்தின் கிளிம்பஸ் வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார் இந்தியில் அமீர்கானும்,மலையாளத்தில் மோகன்லாலும் தெலுங்கில் ராஜமெளலியம் கன்னடத்தில் கிச்சா சுதீப் ஆகியோரும் வெளியிட்டுள்ளனர்.
எங்க தப்பு நடந்தாலும் கண்டிப்பா நா வருவேன்’. இந்தியனுக்கு சாவே கிடையாது” என்று சேனாபதி கர்ஜனையுடன் தொடங்கும் அறிமுக வீடியோவில்,அநியாயம் பழகிருச்சே… எதுவும் இங்க மாறலையே… எவனும் இங்க திருந்தலையே’ என அனிருத் குரலில் ஒலிக்கும் பாடல், நாற்காலியில் அதிகாரியை உட்கார வைத்து காக்கி உடையில் ‘லஞ்சம் லஞ்சம் லஞ்சம்’ என ஆக்ரோஷம் கொள்ளும் கமல்,மறைந்த நடிகர்கள் விவேக் நெடுமுடிவேணு .மனோபாலா ஆகியோரது காட்சிகளும் இடம் பெற்றுள்ளன