இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘கோ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘அன்னக்கொடி’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’புறம்போக்கு என்ற பொதுவுடமை’ ஆகிய படங்களில் நடித்தார்.
ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நடிகை கார்த்திகாவுக்கு எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அதிகாரபூர்வமாக நடிகை கார்த்திகாவே அறிவித்தும் இருந்தார். இதனையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளதாம். ராதாவுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள சொந்தமான திருமணம் மண்டபத்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்பிறகு உன்னுடன் நான் காதலில் விழுந்தது மேஜிக் போல நடந்தது. இனிமேல் நாம் இருவரும் எப்போதும் சேர்ந்து வாழ்வதற்கான தொடக்கத்தின் கவுண்டவுன் இப்போதிருந்து தொடங்குகிறது” எனக் காதலில் உருகியுள்ளார். திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் இந்த காதல் ஜோடிக்குத் தங்களது திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.