“அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர் வெளியீட்டு விழா!

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இவ்விழாவினில் இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் S பேசியதாவது…
எனக்கும் தம்ழி அவ்வளவாக வராது. என் படம் தமிழ், மலையாளம் மொழிகளில் வரவுள்ளது. படம் பாருங்கள் கண்டிப்பாக மிகவும் பிடிக்கும், இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் ஸ்ரீதர் சாருக்கு நன்றி. லோகேஷ் பிரதருக்கு பெரிய நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. இந்தப்படம் இது வரை நீங்கல் பார்க்காத திரில்லர் அனுபவத்தைத் தரும், படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள்.

நடிகர் காளிதாஸ் ஜெயராம் பேசியதாவது..
விஜய் சார் சொன்ன வாழ்க்கை ஒரு வட்டம் டயலாக் தான் ஞாபகம் வருகிறது. இதே இடத்தில் கமல் சார் என் கைபிடித்து, 10 வருடத்திற்கு முன் நடிகனாக என்னை அறிமுகப்படுத்தினார். இப்போது எனக்குப் பிடித்த இயக்குநர், எனக்கு விக்ரம் தந்த லோகேஷ் இங்கு வந்து இந்தப்படத்தைப் பெரிய படமாக்கியிருக்கிறார் நன்றி. தயாரிப்பாளர் காத்திருந்து, இப்படத்தை தியேட்டருக்கு கொண்டுவந்ததற்கு நன்றி. வித்தியாசம் என்று சொன்னாலே எல்லோரும் சொல்வது போல் ஆகிவிடும் ஆனால் உண்மையிலேயே இந்தப்படம் நான் இதுவரை செய்யாத ரோலில் மிக வித்தியாசமானதாக இருக்கும் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் நன்றி.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது…
இன்று நான் செய்வது பெரிய படமாக இருக்கலாம் ஆனால் மாநகரம் செய்யும் போது சின்னப்பட்டமாகத் தான் இருந்தது. சின்னப்படம் நன்றாக இருந்தால் பத்திரிக்கையாளர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். சினிமாவில் எதைப்பற்றிப் பேச வேண்டும் என்றாலும், ஒரு போன் காலில், ஆபிஸ் வந்து விடுவார் காளிதாஸ். சினிமா மீது அவருக்கு மிகப்பெரிய காதல் இருக்கிறது. அவருக்காக என் அசிஸ்டெண்ட்கள் நிறையக் கதை எழுதி வருகிறார்கள். அவர் மிகச்சிறந்த நடிகர். இந்தப்படம் டிரெய்லரே ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. படமும் நன்றாக இருக்குமென நம்புகிறேன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.