இதில் எதிர்பாராத விதமாக ரோப் காமிரா அறுந்து விழுந்தது இதில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. நூலிழையில் உயிர் தப்பினார் சூர்யா.இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதையடுத்து கங்குவா படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் சூர்யா, தான் நலமாக இருப்பதாகவும் ஓய்வு எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் ஓய்வு பெறும் வகையில் மும்பை புறப்பட்டு சென்றுள்ளார். உடன் அவரது மனைவி நடிகை ஜோதிகாவும் சென்றுள்ளார்.சூர்யா மும்பை புறப்பட்டுச்செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களால் வெளியாகி வைராலாகி வருகிறது.