என்.எஸ்.கிருஷ்ணனின் 115 வது பிறந்தநாள் விழா!
By
admin on November 29, 2023
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னோடி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு இன்று (29.11.2023) காலை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் லதா, சச்சு, நியமன செயற்குழு உறுப்பினர்கள் அனந்த நாராயணன், சவுந்தர்ராஜன், சபிதா உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உடன் இருந்தார்.