சசிகுமார்- சரத்குமார் நடித்துள்ள ‘நா நா’ (Na Naa) திரைப்படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது!.
இப்படத்தை என்வி நிர்மல் குமார் எழுதி இயக்கியுள்ளார். ஹர்ஷ வர்தன் ரமேஷ்வர் படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதை பார்வையாளர்களை ஈர்க்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.