சசிகுமார்- சரத்குமார்நடிப்பில் உருவான ‘நா நா’, டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது!
கல்பதரு பிக்சர்ஸ் பி.கே. ராம் மோகன் வழங்கும் இயக்குநர் என்வி நிர்மல் குமார் இயக்கத்தில்
சசிகுமார்- சரத்குமார் நடித்துள்ள ‘நா நா’ (Na Naa) திரைப்படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது!.
இப்படத்தை என்வி நிர்மல் குமார் எழுதி இயக்கியுள்ளார். ஹர்ஷ வர்தன் ரமேஷ்வர் படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஆக்ஷன்-த்ரில்லர் என்டர்டெய்னர்களை விரும்புவோருக்கு இது ஒரு முழுமையான விருந்தாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளார்கள்.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதை பார்வையாளர்களை ஈர்க்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.