’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ’தலைவர் 170’. படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடந்து வரும் நிலையில், நாளை ரஜினியின் பிறந்த நாளில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பிறந்தநாள் டீசர் வீடியோ வெளியாகும் என்று லைக்கா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன், அமிதாப்பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்பட பலர் நடித்து வருகின்றனர் அனிருத் இசையமைத்து வருகிறார்.