கவிஞர் வைர­முத்­துவின் ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா! முக. ஸ்டாலின் வெளியிடுகிறார்!!

வரும் ஜன­வரி 1 ஆம் தேதி சென்னையில் காம­ரா­சர் அரங்­கில் மாலை 6 மணிக்கு நடை­பெ­று­கிறது. இவ்விழாவில் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ‘மகா கவிதை’ நூலை வெளி­யி­டு­கி­றார். நூலின் முதற்­ப­டியை முன்­னாள் மத்திய அமைச்­சர் ப.சிதம்­ப­ரம் பெற்­றுக் கொள்­கி­றார்.

மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்­ஹா­சன், விஞ்­ஞானி மயில்­சாமி அண்­ணா­துரை இரு­வ­ரும் வாழ்த்­துரை வழங்­கு­கி­றார்­கள்.தொடர்ந்து கவிஞர் வைர­முத்து ஏற்­புரை ஆற்­று­கி­றார்

இது குறித்து கவிஞர் வைரமுத்து கூறுகையில்,‘மகா கவிதை’ என்­பது நிலம், – நீர், – காற்று, தீ, வெளி என்ற ஐம்­பூ­தங்­கள் பற்­றிய ஐந்து நெடுங் கவி­தை­க­ளின் பெருந்­தொ­குப்பு ஆகும். கவிப்­பே­ர­ரசு வைர­முத்­து­வின் 30 மாதக் கடும் உழைப்­பி­னால் உரு­வா­னது இந்­தக் கவி­தை­நூல்.“அக­வி­யல் – புற­ வி­யல் – அற­வி­யல் -இறை­யி­யல் என்­றெல்­லாம் பேசிய தமிழ்க்­­கவிதை முதன்­மு­த­லில் முழுக்க அறி­வி­யல் பேசு­கி­றது.

ஐம்­பூ­தங்­க­ளின் அறி­வி­ய­லும் ஈரா­யி­ர­மாண்டு நீண்டு கிடக்­கும் தமிழ்க் கவி­தை­யின் அழ­கி­ய­லும் ஒருங்­கி­ணைந்த பெருங்­க­விதை மகா கவிதை. இளைய தலை­மு­றை­யின் எதிர்­கா­லத்­திற்கு இந்த மகா கவிதை விஞ்­ஞான வாச­லைத் திறந்­து­வி­டும்”இவ்வாறு அவர் கூறினார்

மகா கவிதை என்ற தலைப்­பின் ஐந்து எழுத்­துக்­க­ளி­லும் இந்த நூலின் ஐந்து உள்­ள­டக்­கங்­கள் மறைந்­தி­ருக்­கின்­றன. அவற்­றைக் கண்­டு­பி­டித்­துச் சரி­யான விடை சொல்­ப­வர்க்கு ஐந்து லட்­சம் பரிசு என கவிஞர் வைர­முத்து ஏற்­கெ­னவே அறி­வித்­தி­ருந்­த நிலையில்,அப் போட்­டி­யில் வெற்­றி­பெற்­ற­வர்­கள் மேடை­யி­லேயே அறி­விக்­கப்­பட்டு அவர்களுக்கு முத­ல­மைச்­சர் பரிசுகளை வழங்குவார். இந்­நூலை .கவிஞர் வைர­முத்­து­வின் பதிப்­ப­க­மான ‘சூர்யா இலக்­கி­யம்’ வெளி­யி­டு­கி­றது. வெற்­றித் தமி­ழர் பேர­வை இவ் விழா­விற்­கான ஏற்­பா­டு­களை செய்து வருகின்றனர்.