ரயில் விபத்துகள், நிலநடுக்கம் ,நிலச் சரிவு ,இயற்கை பேரிடர் , தீ விபத்து, விவசாயிகள் போர் என பல கொடுமைகளை மக்கள் அனுபவித்தனர். உயிரிழப்பு பரவலாக இருந்தது.
விலைவாசி உயர்வு ,ஜி. எஸ். டி . வரிவிதிப்பு ,பெட்ரோல் டீசல் விலை உயர்வு, உணவுப் பொருள் பற்றாக்குறை என சாதாரண மக்கள் கசக்கிப் பிழியப்பட்டனர்.
குபேரர்களின் சதவிகிதமும் உயர்ந்தது ,ஏழைகளின் சதவிகிதமும் உயர்ந்தது. சமதர்ம இந்தியாவின் கனவும் தகர்ந்தது . இப்படியாக கடந்த 2023 -ஆம் ஆண்டு அராஜக அரசியலை ஆரோக்கியமாக வளர்த்து விட்டு கடந்திருக்கிறது.
புதிய ஆண்டு ( 2024 ,)ஏழைகளுக்கு புதிய வாழ்க்கையை அமைத்துத் தருமா ?
மக்கள் மகிழும் மாற்றம் நிகழுமா ?
இருப்பதாக சொல்லப்படுகிற எல்லாக் கடவுள்களையும் வேண்டுவோம்.