இப்படத்தில் வில்லனாகஆதவ் சசி என்ற புதுமுக நடிகரின் சண்டை காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. யோகிபாபு மற்றும் மொட்ட ராஜேந்திரனின் காமெடி இந்தப் படத்தில் நிச்சயம் பேசப்படும். பாடல்களுக்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை கார்த்திக் கிருஷ்ணன் உருவாக்கியிருக்கிறார்.
இப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளது. யோகிபாபு மற்றும் கரடியின் காதல் பாடல் குழந்தைகளுக்கு பிடித்தமானதாக அமைந்துள்ளது. மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவருக்குமான ரொமான்ஸ் பாடல் நித்யஸ்ரீயின் குரலில் தரண் இசையில், கு. கார்த்திக் வரிகளில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்கிறார் இப்படத்தின் இயக்குனர்பிரபுராம். ரொமான்ஸ் காமெடி ஜானரில் நகர்ப்புற பின்னணியில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.