இந்நிகழ்வினில், ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் கூறியதாவது,”வெற்றி முதலில் ஒரு ஐடியாவாகத்தான் இதைச் சொன்னார், யார் ஹீரோ என்றேன் நீங்கள் தான் நடிக்கனும் என்றார். நான் முதலில் நடிக்கவில்லை என்றேன். இந்தப்படத்திற்கு நீங்கள் தான் பொருத்தமாக இருப்பீர்கள் என்றார். நீங்கள் எத்தனை ஹீரோக்களுக்கு சொல்லித் தந்திருக்கிறீர்கள் உங்களை மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார். எனக்கும் சரியென்று தோன்றியது. முதலில் கதையில் நிறைய மாற்றங்கள் செய்தோம். நான் இதுவரை செய்த வேலைகளில் நேர்மையாக இருந்திருக்கிறேன். இந்தப்படத்தில் நான் என்னால் முடிந்த அளவு சிறப்பாக பணியாற்றுவேன். சௌத்ரி சார், பஷீர் இருவரும் என்னை முழுமையாக நம்பி வந்துள்ளனர். அவர்களுக்கு வெற்றி தரும் படைப்பாக இப்படத்தை அர்ப்பணிப்போடு உருவாக்குவோம். படத்தைச் சிறப்பாகக் கொண்டு வர ஒவ்வொன்றையும் மிக கவனமாகச் செய்யவுள்ளோம்.
இப்படத்தில் காட்டுவாசியாக நடிக்கிறேன், இது புதுமையான ஆக்சன் படமாக இருக்கும் இப்படத்தில் நடிக்கத் தனியாகப் பயிற்சி எடுத்து வருகிறேன். இப்படம் மற்ற மொழிகளிலும் வெளியாக உள்ளது.. தமிழ் சினிமாவில் எல்லா கலைஞர்களுடன் நான் வேலை பார்த்துள்ளேன் அனைவரின் ஆசீர்வாதம் எனக்கு இருப்பதாக நம்புகிறேன். இவ்வாறு அவர்கூறினார்.
இப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் அவர்களைப் படக்குழுவினர் அணுகவுள்ளனர். மேலும் படத்தில் முன்னணி நட்சத்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். அது பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.