நடிகர் சிவகார்த்திகேயனுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “சிவகார்த்திகேயனுடன் நான் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. ஒவ்வொரு காட்சியிலும் தான் மட்டுமே சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் தனது சக நடிகர்களுடனும் கலந்தாலோசித்து சிறப்பான அவுட்புட்டைக் கொண்டு வருவார் சிவா. இதுபோன்ற விஷயத்தை இதற்கு முன்பு நான் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரிடம்தான் கவனித்து இருக்கிறேன்.
‘அயலான்’ தவிர நடிகர்கள் கார்த்தி & அரவிந்த்சாமி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ’96’ புகழ் பிரேம்குமார் இயக்கும் புதிய படம், நளன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியுடன் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார் கருணாகரன். இதுமட்டுமல்லாது, நாகசைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் புதிய படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார். மேலும், விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்கும் புதிய படம், மிர்ச்சி சிவாவுடன் ‘சூது கவ்வும்2’ மற்றும் கருணாகரன் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளியாக இருக்கும் ‘குற்றச்சாட்டு’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து அவரது கைவசம் உள்ளது.