கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் தீவிரமாக காதலித்து வருவதாகவும், இருவரும் பலமுறை மாலத்தீவுக்கு ஒன்றாக சென்று வந்ததாகவும் டோலிவுட் மீடியாக்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருந்தன. இந்த சூழலில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் ஒரே வீட்டில் வசிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளதாவது, ” வரும் “பிப்ரவரி மாதத்தில் நான் திருமணமோ அல்லது நிச்சயதார்த்தமோ செய்து கொள்ளப் போவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஊடகங்கள் நினைக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த வதந்திகளை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எனக்கு கையோடு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முனைப்பில் மீடியாக்கள் இருக்கின்றன” என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.