இப்படத்தின் நாயகிகளாக த்ரிஷாவுடன் இணைந்து நயன்தாரா நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியானநிலையில், பின்னர் இந்த படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து இப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராய் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியே இல்லை என்றும், நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க போவதாகவும்,ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளதாகவும்,வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடிக்க உள்ளதாகவும்
தகவல்கள் வெளியாகி உள்ளன.