நல்ல தரமான படங்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வெளியிடும் ரெட் ஜெயண்ட்நிறுவனம், இப்படத்தை இந்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
விநாயக் வைத்தியநாதன் இயக்கும் இந்த “ ரோமியோ” வில், விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி என பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘ரோமியோ’ தெலுங்கில் “லவ் குரு” என்ற பெயரில் வெளியாக உள்ளது.
‘பத்துதல’ படத்தின் அட்டகாசமான காட்சியமைப்பிற்காகப் பாராட்டப்பட்ட ஃபரூக் ஜே பாஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.பரத் தனசேகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இப்படத்துக்கு எஸ் கமல நாதன் கலை இயக்குநராகவும், விஜய் ஆண்டனி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.