விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களுக்கு வசனங்கள் எழுதியுள்ள ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில், ஜெயம்ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சைரன்’ படம் வரும் பிப்ரவரி 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப் படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நாயகிகளாக நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நேற்றைய தினம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.
படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள நிலையில், தாமரை வரிகளில் நேற்று வரை என்ற இந்தப் பாடலை பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ஜிவி பிரகாஷ் -சித் ஸ்ரீராம் மேஜிக்கில் உருவாகியுள்ள இந்தப் பாடலின் ரிகர்சல் வீடியோவை தற்போது ஜிவி பிரகாஷ் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ரிகர்சல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.