இந்நிலையில்,கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ’வேலுநாச்சியார்’ திரைப்படம் உருவாக உள்ளதாகவும், இந்த படத்தை தூங்காவனம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இயக்க உள்ளதாகவும், வேலுநாச்சியாராக ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
இது குறித்து இயக்குனர் தரப்பில் விசாரித்த போது,”’வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு குறித்த திரைக்கதை அமைக்கும் பணி நடந்து வருவது உண்மைதான் ஆனால் இன்னும் நடிகர், நடிகையர் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. என்கிறார்கள்.