கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் தொடங்கியது.இப் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.இப்படத்தில் கமலுடன் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ஐந்து நாட்கள் மட்டுமே நடத்தப்பட்ட இப்படத்தின் முதல் கட்ட ஷெட்யூலை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ரஷியாவில் நடத்த திட்டமிட்டுள்ளாராம்.
மணிரத்னம்,இந்த ஐந்து நாட்களும் கமலின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன் தாடி மீசையுடன் மிரட்டல் தோற்றத்தில் காணப்படுவார் என்கிறார்கள் இந்நிலையில் கமல் இன்று காலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்
அங்கு தான் ஏற்று நடிக்கும் ‘தக் லைப்’ கதாபாத்திரத்திற்காக, திரைத்துறை சார்ந்த சில படிப்புகளில் கவனம் செலுத்தும் வகையிலும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு வார காலம் அமெரிக்காவில் தங்கும் கமல், அதன் பிறகு சென்னை திரும்புகிறார். பின்னர் தனது அரசியல் பணிகளை மேற்கொள்ளும் அதன் பிறகே ரஷ்யா செல்கிறார் என்கிறார்கள்.