பிபிஎஸ் புரடக்சன் பட நிறுவனம் சார்பில், பி.உகேஷ்வரன் தயாரித்துள்ள புதிய படத்துக்கு ‘அக்காலி’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் நிறைந்த மர்மத் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை முகமது ஆசிப் ஹமீத் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஸ்வயம்சித்தா தாஸ், (ஆட்டோ சங்கர்), நாசர், வினோத் கிஷன், அர்ஜெய், ஜெயக்குமார், ‘தலைவாசல்’ விஜய், வினோதினி மற்றும் தாரணி ரெட்டி (‘நவரசா’) வித்தைக்காரன்’ புகழ்) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குனர் முகமது ஆசிப் ஹமீத் கூறுகையில், “இப்படம், புதிதாக நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரியான ஸ்வயம்சித்தா தாஸ் கையாளும் வழக்கு ஒன்றைப் பற்றி விவரிக்கிறது. ஏழு ஆண்டுகள் பழமையான இவ்வழக்கு, அமானுஷ்ய கும்பல்களின் தொடர் கொடூர (நரபலி) கொலைகளை கண்டுபிடிப்பது தொடர்பானதாகும். இவ்வழக்கு தொடர்பாக மீண்டும் ஸ்வயம்சித்தா தாஸ் விசாரணையை தொடங்கும் நேரத்தில் மீண்டும் இதே போன்ற கொலைகள் அரங்கேறத் தொடங்கும் நிலையில், இந்த வழக்கு உத்வேகம் பெறுகிறது.
இவ்வழக்கின் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்காக இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் போலீஸ் அதிகாரியின் (ஜெயக்குமார்) உதவியை ஸ்வயம்சித்தா தாஸ் நாடுகிறார். பல்வேறு சவால்கள் மற்றும் தடைகளை கடந்து இந்த வழக்கை அவர் முடிவுக்கு கொண்டு வருகிறாரா இல்லையா என்பது தான் படத்தின் மையக்கரு,இதில், நாசர் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். இவர் வரும் காட்சிகள், நிஜமாகவே பார்வையாளர்களுக்கு படு மிரட்டலாக இருக்கும்.
சென்னையின் புறநகர்ப் பகுதியில் பொழிச்சலூர் காடுகளில், ‘கலை இயக்குனர்’ தோட்டா தரணியால் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு, இப்படத்தின் விறுவிறுப்பான கிளைமாக்ஸ் காட்சி இரண்டு வாரங்கள் படமாக்கப்பட்டது. ” என்கிறார்.இப்படத்திம் ஒளிப்பதிவை கிரி மர்பி கவனிக்க,அனிஷ் மோகன் இசையமைத்துள்ளார்,