இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
.இந்நிகழ்வில் நடிகர் புகழ் பேசுகையில், “இதே சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டூடியோ எதிர்ல இருக்குற காவேரி தெருவுல ஒரு வாட்டர் வாஷ் கடையில வண்டி கழுவிட்டு இருந்தேன். அதே தெருவுல இருக்குற ஓட்டல்ல எச்சில் இலை எடுத்துட்டு, வேலை பார்த்துக் இருந்தேன்.இன்னிக்கு அங்கேயே பேனர் வைத்து, இது நான் நடித்துள்ள படம் என்று பலரும் சொல்லும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. யாராவது 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் திருப்பி எப்போ தருவே? என்று தான் கேட்பார்கள்.ஆனால், என்னை நம்பி இவ்வளவு பணம் போட்டு,இப் படத்தை எடுத்ததற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. இதுவரை நிறைய ஹீரோயின்கள்கிட்ட இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்திருப்பேன். எல்லாரும் கதையைக் கேட்டு, யார் ஹீரோ என கேட்பார்கள் நான்தான் என்றதும் வேண்டாம் என்று கூறி விடுவார்கள். ஆனால், இந்த ஹீரோயின் மட்டும்தான் கதை பிடிச்சிருக்கு என என்னுடன் நடிக்க ஒப்புக் கொண்டார்.
யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு மியூசிக் போடுவாரான்னு நினைத்தேன். ஆனால், போஸ்டரை பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது. இந்த படத்தில் முகம்சுளிக்க வைக்கும் கொச்சையான வசனமோ, காட்சிகளோ எதுவும் கிடையாது.நாம் அன்பு காட்டினால் மிருகங்கள் கூட அன்பாக இருக்கும் என்பதையும் காட்டி உள்ளோம். சூரி அண்ணன் ஊர் திருவிழாவிற்கு சென்றபோது, எல்லாரும் ஒன்றாக நில்லுங்கள் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னையும் அழைத்து புகைப்படம் எடுக்க நிற்க வைத்தார். அவரது குடும்பத்தில் என்னையும் ஒருவராக பார்ப்பதில் மகிழ்ச்சி” இவ்வாறு அவர் பேசினார்