விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி-அதிதி ஷங்கர் !

தமிழில் வெளியான  “அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’ மற்றும் ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து  இயக்குநர் விஷ்ணு வர்தன், தேசிய விருது பெற்ற ‘ஷெர்ஷா’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் முத்திரை பதித்தார். தற்போது தனது அடுத்த படத்திற்காக நடிகர் சல்மான் கானுடன் இணைந்துள்ளார்.

இந்நிலையில்,விஷ்ணுவர்தன் தமிழுக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.  மறைந்த நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் புதியப்படத்தை இயக்கி வருகிறார்.கதாநாயகியாக அதிதி சங்கர் நடிக்கிறார்.

இப்படத்தில் ஆகாஷ் முரளியுடன், அதிதி ஷங்கர் தவிர சரத்குமார், பிரபு கணேசன், குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸின் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். . இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் உள்ள பல்வேறு நகரங்களில் நடந்தது. இந்தியாவில் பெங்களூரு மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இப்படம்  தமிழில் விஷ்ணு வர்தனின் கம்பேக் படம் அழகான காதல் கதையாக இருக்கும் என்கிறது படக்குழு. கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு . யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.