இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், லால் சலாம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாககூறிய அவர் வேட்டையன் படம் குறித்து கூறியதாவது, “வேட்டையன் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது.
இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே படமாக்கப்பட்ட வேண்டி உள்ளது.மேலும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் எனது 171 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றவரிடம், நடிகர் விஜய் மற்றும் விஷாலின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சாரி, அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்க் வேண்டாம் என கூறிவிட்டு புறப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்