‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ ஆகிய படங்களை இயக்கி கோலிவுட்டில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள சு அருண்குமார் ‘சியான் 62’ படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் விக்ரம், நீண்ட காலங்களுக்கு பிறகு கிராமத்து கேரக்டரில் நடிக்கவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். திருத்தணி பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.மும்பை கார், தக்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ள எச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் இப் படத்தை தயாரித்து வருகிறது.