இந்த விபத்தில், கார் ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெற்றியின் நன்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், காரில் பயணித்த வெற்றி துரைசாமி மாயமானார் அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என கருதப்பட்டது இதையடுத்து கடந்த 8 நாட்களாக அவரை தேடும் பணி நடந்து வந்தது.
மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தத் தகவல் வெளியான நிலையில், வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி இமாச்சலப் பிரதேசம் செல்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரேதபரிசோதனைக்கு பின்னர் , வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.