இந்தப் படம் 2018ஆம் ஆண்டு தொடங்கியது. சிறிய நகரத்தில் உள்ள இளைஞர்களை சுற்றி நகரும் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. சாலையை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் நகர்கிறது.
மதுரையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் வழியாக மாயவரத்தை அடைகிறார்கள் இரண்டு இளைஞர்கள். பூம்புகார் செல்வதற்கு முன்பு அவர்களுடன் அந்தப் பயணத்தில் ஒரு பெண்ணும் இணைகிறாள். வேகமாக மாறிவரும் சமுதாயத்தில் இளம் தலைமுறையினர் படும் அவலத்தையும், அவர்கள் மீதான அணுகுமுறையையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
இயக்குநர் பிரசாத் ராமர் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். படத்திற்கு இசையமைத்து, தயாரித்து, பாடல்களையும் பிரதீப் குமார் எழுதியுள்ளார். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்கிறார்,
இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து, மார்ச் 2024ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.