தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்.”என்றும் கட்சியினருக்கு தமிழக வெற்றிக் கழகம் அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் நடிகர் விஜய் தனது கட்சியினருக்கு கண்டிப்பான உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதாவது,தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை பணி விரைவில் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது,
இந்த உறுப்பினர் சேர்க்கை பணிகள் முடிந்தவுடன் மட்டுமே பொறுப்பாளர்கள் நியமனம் பணி நடைபெறும் என்றும், மக்கள் இயக்கத்தில் நிர்வாகிகள் ஏற்கனவே பொறுப்புகளில் இருந்தாலும், அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நபர்கள் மட்டுமே தொடர்ந்து அந்த பொறுப்பில் தொடர்வார்கள் என்றும் ,உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியில் ஒவ்வொருவரும் தங்களுக்கு வழங்கப்படும் எண்ணை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் ஒவ்வொரு பகுதியிலும் யார் அதிக உறுப்பினர்களை சேர்கிறார்களோ அதன் அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்படும்.
அடுத்த வாரத்திற்குள் இந்த செயலி நிர்வாகிகள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்.வெளியாகியுள்ளது.மேலும் தமிழகத்தின் 234 தொகுதிகளையும் 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்கவும் நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதன் காரணமாக தற்போதே நிர்வாகிகள் தங்களது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணியை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.