இந்த பிரச்சனை நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை தெரிவித்தார் அதில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது. தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தும் எனது சட்டத் துறை செய்யும்” என்றும் பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்றும் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்களிலும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் .அவ்வாறு, மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும், சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் எழுத்து வடிவில் இருக்கும் அத்தனை அவதூறுகளையும் நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த நான்கு நாட்களுக்குள் இதுகுறித்து பதில் அளிக்குமாறும், த்ரிஷாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் நடிகை திரிஷா எச்சரித்துள்ளார். இந்த நோட்டீசை தனது எக்ஸ் தளத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.