இந்தப் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை த்ரில்லராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அது போலத்தான் எழுதவும் ஆரம்பித்தேன், மிகவும் சிரமமாக இருந்தது, இந்தப்படத்திற்காக நடிகர்களைத் தேர்வு செய்யும்போது இது போன்ற கதைகள் கொண்ட படங்களில் நடிக்காதவர்களைத் தான் செய்ய வேண்டும் என்று நினைத்தேன், அப்படித்தான் ஶ்ரீகாந்த் சாரை சந்தித்து இந்த படத்தைப் பற்றிப் பேசினேன். அனைத்து நடிகர்களையும் அப்படித்தான் தேர்வு செய்தேன். படம் முழுக்க முழுக்க திரில்லாரகவே இந்தப் படம் இருக்கும். கதாநாயகியும் சிறப்பாக நடித்தார். ஹீரோவுக்கு நிகராக இந்தப் படத்தில் நடித்தார், இசையமைப்பாளரும் நானும் நிறைய டிஸ்கஸ் செய்தோம், படத்தில் பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளது.
இப்படம் டிரெய்லரில் சத்தம் அதிகமாக இருப்பது போல் தெரிந்தாலும் இது தலைப்புக்கேற்ற படமாகத் தான் இருக்கும் உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். இந்த விழாவிற்குச் சூழ்நிலை காரணமாகவே ஸ்ரீகாந்த் அவர்களால் வர முடியவில்லை. அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். படத்தில் அவரது உழைப்பும், அர்ப்பணிப்பும் மிகப்பெரியது. அவர் படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் மிகப்பிடித்த படமாக இருக்கும் என்றார்.