சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் தமிழகத்திலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கமலை சந்தித்தும் இப்படக்குழு ஆசி பெற்று திரும்பியிருக்கிறது. தற்போதுஇப்படம், 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இந்த படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார் இயக்குனர் சிதம்பரம். இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரத்திற்கு அடுத்து பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். பல தயாரிப்பாளர்கள் அவருக்கு அட்வான்ஸ் கொடுக்க காத்திருக்கிறார்களாம்.
நடிகர் தனுஷை இயக்க சொல்லி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் இயக்குனர் சிதம்பரத்தை ஒப்பந்தம் செத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.