நடிகர் விவேக்கின் தந்தை மரணம்

நகைச்சுவை நடிகர் விவேக்கின் தந்தை அங்கையா நேற்று சென்னையில் மரணமடைந்தார்.

சென்னையில் தங்கியிருந்த அங்கையா, அவ்வப்போது அகதிகள் முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் காலை உணவு சாப்பிட்டுப் படுத்தவர், உறக்கத்திலேயே உயிர் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அங்கையாவிற்கு விவேக்கை தவிர, மேலும் ஒரு மகள் உள்ளார்.

அங்கையாவின் மனைவி கோவில்பட்டியில் வசிக்கிறார். இவரது இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான கோவில்பட்டியில் இன்று நடக்கின்றன. இதற்காக, நடிகர் விவேக் தன் தந்தையின் உடலுடன் கோவில்பட்டி செல்கிறார்.

Comments (0)
Add Comment