இந்நிலையில், நேற்று இரவு திருவான்மியூர் வீட்டில் இருந்த போது டேனியல் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார் . இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
அவரது உடல் நேற்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து அவர் பிறந்து வளர்ந்த சென்னை புரசைவாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த டேனியல் பாலாஜியின் கண்கள் அவரது விருப்பப்படியே தானம் செய்யப்பட்டுள்ளது
அவரது உடலுக்கு இயக்குனர்கள் கவுதம் மேனன், அமீர் வெற்றிமாறன், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் உள்ளிட திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடக்கிறது.பின்னர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் தகனம் செய்யபட உள்ளது.