ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் கடந்த மாதம் 24ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. திருமண வரவேற்பு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இதில் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்திரஜா தனது உறவினரான கார்த்திக் என்பவரையே திருமணம் செய்துள்ளார் . இந்நிலையில்,திருமண வவேற்பு விழா கொண்டாட்டத்தின் போது மேடையில் ரோபோ சங்கரின் மனைவியும், மருமகன் கார்த்திக்கும் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது ரோபோவின் மனைவிக்கு மருமகன் கார்த்திக் ‘லிப்கிஸ்’ கொடுத்து விட்டார். சர்ச்சைக்குரிய இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.இதனைப் பார்த்த ரசிகர்கள் யாராவது மாமியாருக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பார்களா?.. இதெல்லாம் என்ன மாதிரியான கலாச்சாரம் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.