நடிகர் சித்தார்த். நடிகை அதிதி ராவ் இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வருகின்றனர். கடந்த மாதம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.இந்நிலையில் இவர்களது திருமணம், இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்கிறார்கள்.இந்நிலையில் நடிகர் சித்தார்த் நேற்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடினார். வருங்கால காதல் கணவருக்கு நடிகை அதிதி ராவ் , தாங்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அப் பதிவில், ‘என்னவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லையில்லா சிரிப்போடும், என்றென்றும் சந்தோஷம் தொடர வாழ்த்துக்கள். நீ என்ன செய்தாலும் அதை ஊக்குவிக்க என்றென்றும் உன்னுடைய சியர் லீடராக நான் இருப்பேன்’” என்றும் குறிப்பிட்டுள்ளார்