சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘ராபர்’. இப்படத்தின் நாயகனாக ‘மெட்ரோ’ படத்தில் நடித்த சத்யா நடிக்கிறார்.இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ‘மெட்ரோ,’கோடியில் ஒருவன்’ படங்களின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் கவிதா எஸ் மற்றும் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணன் இணைந்து தயாரித்துள்ளனர்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராய் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இப்படம் குறித்து அதன் இயக்குனர் எஸ். எம்.பாண்டி கூறுகையில்,” ஒரு கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி வேலை தேடி வருகிறான் நாயகன். சென்னையின் பகட்டும் பளபளப்பும் அவனைக் கவர்கின்றன.மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கை மேல் அவனுக்குப் பிரமிப்பும் ஈர்ப்பும் வருகின்றன. தானும் இது போல் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.நாயகன் தன் விருப்பத்தை அடையும் வழி கடினமாக இருக்கவே குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கிறான்.ஒருகட்டத்தில் நாயகனின் ஆசை பேராசையாகி வெறியாக மாறுகிறது. அவனது குறுக்கு வழி, திருட்டு வழியாக மாறுகிறது. நாயகன் தேர்ந்தெடுத்த பாதை அவன் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதே ‘ராபர்’படத்தின் கதை.என்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும், சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை என்.எஸ்.உதயகுமார் கவனிக்க, ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.