இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் நிர்வாகிகள் பெயர் அடங்கிய பொது நோட்டீஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது
.அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை கழக செயலாளர் ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளராக தகிரா உள்ளிட்டோர் பெயர் இடம் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்வதற்கு யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.