இத்திரைப்படத்தை விகர்ணன் அசோக் இயக்குகிறார். இவர் ‘தருமி’ என்ற குறும்படத்திற்கா பல விருதுகள் பெற்றுள்ளார். இத்திரைப்படத்தின் கதாநாயகனாக கவின் நடிக்கிறார். இவருடன் ஆண்ட்ரியா , சார்லி, ருஹானி ஷர்மா ,பாலா சரவணன், VJ அர்ச்சனா சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இத்திரைப்படத்திற்கு, G.V. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், ராமர் படத்தொகுப்பு கவனிக்கிறார், கலை இயக்குனராக ஜாக்கியும்,ஆடை வடிவமைப்பாளர்களக பூர்த்தி மற்றும் விபின் ஆகியோரும் பணியாற்றுகின்றனர். இன்று மாஸ்க் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது.
கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் மாஸ்க் திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் சென்னையில் துவங்குகிறது.