பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மய்யமாக வைத்து உருவாகும் படத்தில் சத்யராஜ் பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் இது குறித்து நடிகர் சத்யராஜிடம் கேட்டபோது“இது குறித்து பலரும் என்னிடம் கேட்டு வருகின்றனர் எனக்கே இது புதுசா தான் இருக்கு. மோடி பயோபிக்கில் படம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இது குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை.
இப்படி யாரோ எதையோ கிளப்பிவிட்டு விடுவார்கள். வாய்ப்பு வரட்டும் அதில் நடிப்பது குறித்து அப்புறம் யோசிக்கலாம். நாத்திக கருத்துகளை அதிகம் பேசிய எம்.ஆர்.ராதாவே ஏகப்பட்ட படங்களில் ஆன்மிகவாதியாக நடித்துள்ளார்.. ” என்றார்.