ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது . இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ உயரதிகாரியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் அதிகமான ரிஸ்க் கான பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.இந்நிலையில் நடிகர் அஜித்தை பின்பற்றி அமரன் பட குழுவினருக்கு சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். அவர் பட குழுவினருக்கு தானே பரிமாறியுள்ளார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அஜித் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது