நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜிஅமரன் 44 வயதை கடந்த நிலையிலும் முரட்டு சிங்கிளாகவே சுற்றிக்கொண்டிருந்த நிலையில், கடந்த ஜனவரியில் இந்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அதிரடியாக (ஒரு வழியாக) அறிவித்திருந்தது எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது .
இந்நிலையில்,சேலத்தை சேர்ந்த இந்து என்பவரை பிரேம்ஜி அமரன் வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்யவுள்ளார். தற்போது பிரேம்ஜியின் திருமண பத்திரிகை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. எளிமையான முறையில் அச்சடிக்கப்பட்ட இந்த திருமண அழைப்பிதழில் பிரேம்ஜி மற்றும் இந்துவின் திருமணம் குறித்த தகவல்கள் சிறப்பான முறையில் காணப்படுகின்றன.
வரும் ஜூன் மாதம் 9ம் தேதி காலை 9 மணி முதல் 10,30 மணிக்கும் பிரேம்ஜி -இந்து திருமணம் நடக்கவுள்ளதாக பத்திரிகையில் காணப்படுகிறது. திருத்தணி முருகன் கோயிலில் இந்த திருமணம் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த திருமண பத்திரிகையில், கங்கை அமரனின் அண்ணன் இளையராஜா குறித்த எந்த தகவலும் இல்லை.என்பது குறிப்பிடத்தக்கது