சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த கங்குவா’ படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 44’ படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் அந்தமானில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பில், அந்தமானில் உள்ள போர்ட் பிளேர் துறைமுகத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை படமாக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் நாயகன் சூர்யாவின் ஃபர்ஸ்ட் ஷார்ட் வீடியோவை தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.
இதில் சூர்யா கலர் கலரான உடையில்,’பிரெஞ்சு பியர்ட்’ வைத்து வித்தியாசமான மாஸான தோற்றத்தில் காணப்படுகிறார்.இப்படத்தில் சூர்யாவுடன் , பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை சூர்யாவின் ‘2டி என்டர்டைன்மெண்ட்’ நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது