நடந்து முடிந்த (2024) மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (04.06.2024) காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், பாஜக கூட்டணி 290 இடங்களில் முன்னிலையில் உள்ளது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.வாரணாசி தொகுதியில் பிரதமர் மோதி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்ட ரே பரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.இதையடுத்து
திமுக கூட்டணி கட்சியினர் தங்களது வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.