டி.கிரியேஷன்ஸ் பட நிறுவனம் இயக்குனர் திருமலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில்,கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் “எமக்குத் தொழில் ரொமான்ஸ் .இப்படத்தில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்க, இவர்களுடன் ஊர்வசி அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ், விஜய் வரதராஜ், படவா கோபி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.விரைவில் வெளியாகவுள்ள இப்படம் குறித்து இயக்குனர் பாலாஜி கேசவன் கூறுகையில், ” இது எனக்கு முதல் படம் . ரொமான்டிக் காமெடியாக உருவாகி உள்ளது இதில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். அசோக் செல்வன் சினிமா உதவி இயக்குனராக வருகிறார். அவந்திகா மிஸ்ரா ஒரு மருத்துவமனையில் ‘ஸ்டாப்’ நர்சாக பணிபுரிந்து வருகிறார்’ ஊர்வசி, அசோக் செல்வனுக்கு அம்மாவாகவும், அழகம்பெருமாள் அப்பாவாகவும் நடித்துள்ளனர்
.எம் எஸ் பாஸ்கர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இது பெரிய வித்தியாசமான கதையோ, பெரிய திருப்பங்கள் நிறைந்த கதையோ கிடையாது. காட்சி அமைப்புகள்,மற்றும் திரைக்கதை தான் சுவாரசியமாக இருக்கும். இந்த கதை எழுதப்பட்டதும், எடுக்கப்பட்டதன் நோக்கமும் ,ரசிகர்களுக்கு பக்கா கமர்சியல் ஜாலியான பொழுதுபோக்கு படத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான்.
நாயகன் ஒரு பெண்ணை பார்க்கிறான். பார்த்ததும் அவனுக்கு, அவள் மேல் வரும் காதல், அந்த காதலை அவளிடம் சொல்வதில் உள்ள சிக்கல்கள். அதன் பிறகு அவர்களது காதலில் ஏற்படும் பிரச்சனை. அந்தப் பிரச்சினையை அவன் சரி செய்ய முடியாமல் தவிக்கும்போது, அவனது நண்பர்களும், குடும்பத்தினரும் சேர்ந்து ஒரு நாடகமாடி அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க முயல்கிறார்கள் .அது இன்னும் அவனது காதலில் சிக்கலை அதிகப்படுத்துகிறது. இதையடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் ஜாலியான மீதி கதையாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.