. இதுபற்றி விஷ்ணு வரதன் கூறுகையில்,“நான் அவருக்குள்ளிருக்கும் ‘ஸ்டார்’ரைப் பார்க்கிறேன். ஆகாஷ் ஒரு திறமையான கலைஞர். மேலும் அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது நடிப்புத் திறனை மெருகேற்ற நிறைய தயார் செய்துள்ளார். அவரது நடிப்பை திரையில் பார்க்கும் பார்வையாளர்கள் எனது வார்த்தைகளை ஏற்றுக் கொள்வார்கள். இந்த படம் ஒரு அழகான சாகச காதல் கதையாக இருக்கும். இது காதலில் உள்ளவர்கள், காதலித்தவர்கள் மற்றும் காதலிக்கப் போகிறவர்கள் அனைவரையும் ஈர்க்கும் பல தருணங்களைக் கொண்டதாக இருக்கும்” என்றார்.
எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ கூறுகையில், “நாட்டின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணு வர்தனுடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. விஷ்ணு வர்தன் தனது ஹீரோக்களை எப்போதும் அழகாக திரையில் காண்பிப்பார். இந்தப் படம் ஆகாஷ் முரளிக்கு ஒரு அழகான அறிமுகமாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மாதங்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
’நேசிப்பாயா’ படத்தை விஷ்ணு வர்தன் இயக்கியுள்ளார் மற்றும் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். சினேகா பிரிட்டோ இணை தயாரிப்பாளராக உள்ளார். யுவன் சங்கர் ராஜா (இசை). விஷ்ணு வர்தன் மற்றும் நீலன் சேகர் ஆகியோர் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் கேமரூன் எரிக் பிரைசன் (ஒளிப்பதிவு), ஓம் பிரகாஷ் (கூடுதல் ஒளிப்பதிவு), ஏ. ஸ்ரீகர் பிரசாத் (எடிட்டர்),