கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ரகுல் ப்ரீத் சிங், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜாக்கி பக்னானி தனது நிறுவனம் சார்பில் கோவிந்தா நடித்த ‘கூலி நம்பர் 1’, ‘ஹீரோ நம்பர் 1’, சல்மான் கான் நடித்த ‘பீவி நம்பர் 1’, அக்ஷய்குமார் நடிப்பில் உருவான ‘பெல்பாட்டம்’, டைகர் ஷெராஃப், அமிதாப்பச்சன் நடித்த ‘கண்பத்’, அக்ஷய் குமார் நடித்த ‘படே மியான் சோட்டே மியான்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில்,இப்படங்களில் சில பெரும் நஷடத்தை சந்தித்ததால் ரூ.250 கோடி அளவுக்கு பெரும் கடன் சுமைக்கு ஆளானார்.இதையடுத்து அவர் தனக்கு சொந்தமான மும்பையின் மையப்பகுதியில் இருந்த ஏழு மாடி கட்டிடத்தை விற்பனை செய்துவிட்டு ஊழியர்களையும் 80சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்பிய ரகுல் பிரீத் சிங்கின் கணவர், தனது அலுவலகத்தையம் மும்பையின் வேறொரு பகுதியில் இரண்டு படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு மாற்றி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது