தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள “பிறந்தநாள் வாழ்த்துகள்” படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ராஜு சந்ரா இதற்கு முன் மலையாளத்தில் ‘ஐயெம் ஏ பாதர்’, ‘ஜிம்மி இ வீட்டில் ஐஸ்வர்யம்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இப்படங்கள் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழில் இப்படத்தின் மூலம் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா அனில் அறிமுகமாகிறார். இதில் ஸ்ரீஜா ரவி மிகவும் சவாலான, வித்தியாசமான மற்றும் மர்மமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு முக்கிய வேடத்தில் ரோஜி மேத்யூ நடிக்கிறார். இவர்களுடன் சந்தோஷ் சுவாமிநாதன், ராகந்த், மிமிக்ரி பாபு, வினு அச்சுதன், அமித் மாதவன், விஷ்ணு, இம்பரஸ், பக்தவத்சலன், சுல்பியா மஜீத், ஈஸ்வரி மற்றும் வீரம்மாள் ஆகியோர் நடித்துள்ளனர். பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பை மாதன்ஸ் குழுமம் ஏற்றுள்ளது. கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.