’24 ஹவர்ஸ்’ புரடக்சன்ஸ் படநிறுவனம் தயாரித்துள்ள புதிய படத்துக்கு ‘ஒன் டு ஒன்’ என பெயரிடப்பட்டுள்ளது ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் நாயகனாக இயக்குனர் சுந்தர்.சி நடிக்க, மிரட்டல் வில்லனாக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடித்துள்ளார். இவர்களுடன் விஜயவர்மன்,நீதுசந்திரா,ராகினி திவேதி பேபி மானஸ்வி உள்பட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை எழுதி இயக்கியுள்ள கே. திருஞானம் கூறுகையில், “பிரபல வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார் சுந்தர்.சி.அவரது வங்கிக்கு வருகை தரும் பிரபல நகைக்கடை அதிபர் வங்கி லாக்கரில் ஒரு பாக்ஸை வைத்துவிட்டு செல்லும் போது எதிர்பாராதவிதமாக இறந்து விடுகிறார். அந்த சம்பவம் மனைவி,குழந்தை என அமைதியாக வாழ்ந்து வரும் வங்கி மேலாளர் சுந்தர்.சியின் வாழக்கையையே அடியோடு புரட்டிப்போட்டு விடுகிறது .அது ஏன்,எப்படி? அதிலிருந்து சுந்தர்சி மீள்கிறாரா,இல்லையா? என்பது தான் இப்படத்தின் பரபரப்பான திரைக்கதையாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே பரபரப்பாக இருக்கும். என்கிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை எஸ்.கே.ஏ.பூபதி,கார்த்திக்,பிரவீன் நித்தியானந்தம் நிகரம் மோகன் ஆகியோர் கவனிக்க,சித்தார்த் விபின் இசையமைத்து வருகிறார்.