‘தள்ளி போகாதே’, ‘பூமராங்’, ‘இவன் தந்திரன்’, ‘காசேதான் கடவுளடா’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ போன்ற படங்களை தயாரித்து இயக்கியுள்ள ஆர்.கண்ணன் தற்போது “இவன் தந்திரன்-2”ம் பாகத்தை தயாரித்து இயக்குகிறார்,’இவன் தந்திரன்’ முதல் பாகத்தில் கவுதம் கார்த்திக், ஷரத்தா ஶ்ரீநாத் இருவரும் ‘நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகத்தில் தற்போது சரண் கதாநாயகனாக நடிக்கிறார். இவரின் ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்து வருகிறது. மேலும், இப்படத்தில் சமுத்திரகனி, தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், கலைராணி மற்றும் பல முக்கிய நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர் ‘ரிச்சி ஸ்டிரீட் பாய்ஸ் ஆர் பேக்’ இது தான் படத்தின் சப் டைட்டில்.. மையக்கரு. ‘இவன் தந்திரன்’ படத்தின் தொடர்ச்சி தான் “இவன் தந்திரன்-2” என்கிறார் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கி வரும் ஆர்.கண்ணன். நேற்று இப்படத்தின் பூஜை நடந்தது.அதை தொடர்ந்து விரைவில் படபிடிப்பு சென்னையில் ஆரம்பமாகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை பால சுப்ரமணியெம் கவனிக்க,தமன் இசையமைத்து வருகிறார்.