டீன்ஸ் . ( விமர்சனம்.) பசங்க படம் . பார்க்கலாமா ?

வித்தியாசமாக  சிந்தனை செய்பவர் “என்கிற சிறப்பு உள்ளவர்  நடிகர் ,இயக்குநர் ,கவிஞர் என பல பரிணாமங்கள் அமைந்த பார்த்திபன் . 

 சிறுவர் ,சிறுமியருக்காக எடுக்கப்பட்ட படம் டீன்ஸ்  என்கிறார்கள் . அதாவது  டைட்டில்படி பார்த்தால்  விடலைப் பருவத்தினருக்கான  திரைப்படம்.  கலயத்தில் கள் குடிப்பது, பருவ மயக்கத்துடன் ‘ஐ லவ் யூ ‘சொல்லுவது இதெல்லாம் அந்த பருவத்து அவசரங்கள் .! ஆனால் படத்தில் வருகிறவர்கள் பதின் பருவத்துக்கானவர்கள் அல்லர்.பொடியன்ஸ் . சிறுமிகளாக நடித்திருப்பவர்கள் விதிவிலக்கு. அசல் டீன்ஸ்.

பள்ளிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கிராமத்துப் பேயை பார்க்க 13 பேர் போகிறார்கள். வழியில் பலவித அச்சுறுத்தல் ,தடைகள் . எப்படி எதிர்கொண்டு தப்பித்து வீடு அடைகிறார்கள் என்பதுதான் பார்த்திபன் கனவு.!

பசங்க கேமரா பயமில்லாமல்   இயல்புடன்  நடித்திருக்கிறார்கள்.அவர்களின் பேச்சுக்கு பொறுப்பு பார்த்திபன் மட்டுமே.!

யோகி பாபு இடைச்செருகலாக வருகிறார் . போகிறார் .வழிப்போக்கன் .!!!

நாசா ஆய்வாளராக , முக்கியமான கேரக்டரில்  பார்த்திபன் .

டி.இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கலாம் .

ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யு.ஆரி , நிறைவாகச் செய்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் பார்த்திபன். பேய் பிசாசுகளுக்குப் பதிலாக ஒரு புதுமையை வைத்திருப்பது வரவேற்புக்குரியவை.

–தேவிமணி